ரூபா 5000.00 நிதியை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் இரத்மலானை பிரதேச அலுவலகத்தின் அலுவலக பணி உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

மொரட்டுவ பிரதேசத்தில் வசிப்பிடமாகக் கொண்ட வர்த்தகர் ஒருவரினால் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 5000.00 பணத்தை இலஞ்சமாகப் கோரி அதனைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் இரத்மலானை பிரதேச அலுவலகத்தின் அலுவலக உதவியாளர் 2021.04.07 ஆம் திகதி இரத்மலானை சொய்சாபுர சந்தியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளரின் மைத்துனரின் பெயரில் உள்ள முறைப்பாட்டாளருக்குரிய இலக்கம NG-5550 கொண்ட பஸ்வண்டியின் 2021 ஆண்டிற்குரியதான போக்குவரத்து அனுமதிப்பத்திரம், லொக் சீட் உட்பட வீதி இலக்கத்தைக் குறிப்பிடும் ஸ்டிகரை இரத்மலனை வீதிப் போக்குவரத்த அதிகாரசபையினால் துரிதகதியில் பெற்றுக் கொள்ள தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ரூபா 5000.00 நிதியை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக் கொள்ளும் போது சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search