இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 150,000.00 நிதியை இலஞ்சமாக கோரி பொறுப்பேற்ற குற்றச்சாட்டிற்கு அமைய, பொதுவில் பிரதேச செயலக அலுவலகத்தில் சேவையாற்றும் காணி உத்தியோகத்தர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் 2021.07.16 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.
முறைப்பாட்டாளருக்கு மணல் அகழ்வு அனுமதிப் பத்திரத்திரத்;திற்கு தேவையான பரிந்துரைகளை வழங்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பொதுவில் பிரதேச செயலக அலுவலகத்தின் காணி உத்தியோகத்தர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் ரூபா 03 இலட்சம் பணத்தைக் கோரி, பின்னர் அதனை 02 இலட்சமாகக் குறைத்து அதில் முதலாவது தொகையான ரூபா 50,000.00 நிதியை முறைப்பாட்டாளரை சந்தித்ததித்து வெளிக்கள பரிசோதரின் உதவியுடன் காணி உத்தியோகத்தரினால் பெறப்பட்டுள்ளது. பின்னர் முறைப்பாட்டாளரினால் வழங்கப்பட்டுள்ள 02 கோவைகளிலும் குறைபாடுகளை சரியாக திருத்தியமைப்பதற்காக எஞ்சிய ரூபா 150,000.00 நிதியைக் கோரி பொறுப்பேற்றல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.