யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமைக்காக கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவுத் குடியகழ்வு தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ரூபா 500,000.00 இனை 2025.01.20 ஆம் திகதி பி.ப 4.42 மணியளவில் குடிவரவுத் திணைக்களத்தின் வெலிசறை வரவேற்பு நிலையத்தில் வைத்து கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் அதிகாரமளிக்கப்பட்ட குடிவரவு, குடியகழ்வு திணைக்கள அதிகாரி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.