கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் முறைப்பாட்டாளரினால் நடாத்தப்படும் நிறுவனத்தில் சேவைபுரியும் ஊழியர்களின் மாதாந்தம் வழங்கப்படும் அடிப்படை சம்பளத்தினை ரூபா 5000.00 தினால் அதிகரிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அதிகரிக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஊழியர் சேமலாப நிதியினை வழங்க வேண்டும் எனவும், இந்த நிறுவனம் தொடர்பில் முன்னைய குற்றச்சாட்டுகள் உள்ளது எனவும் அது தொடரபில் மேலதிகாரிகளை தெளிவுபடுத்தி சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்காதிருக்கவும், விசாரணையின் நிமித்தம் பெற்றுக் கொள்ளபப்ட்ட ஆவணங்களைத் மீளக்கையளிக்கவும் ரூபா 250,000.00 (இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்தினை) இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் தொழிலாளர் திணைக்களத்தின் கொழும்பு மேற்கு பிரதேச செயலகத்தின் தொழில் அலுவலராக பணிபுரியும் ஒருவர் 2025.01.22 ஆம் திகதி பி.ப 1.55 மணிக்கு கல்கிஸ்ஸை, காலி வீதியில் டெம்பளர்ஸ் சந்திக்கு அருகாமையில் அமையப் பெற்றுள்ள அரசாங்க மருத்தாக்கக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னாள் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.