கல்னேவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கொள்வனவு செய்யப்பட்ட பயிர் வெட்டும் இயந்திரம் (சுனாமி) வாங்கியவருக்கு சொந்தமானது அல்ல என விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்காமல் தீர்த்து வைத்ததோடு, இயந்திரத்திற்காக வாங்கிய பணத்தை மீளப் பெற்றுத் தரவும், பழைய உலோக வியாபாரத்தை சிரமமின்றி தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தரவும், 30,000 ரூபாவினை இலஞ்சம் கோருவதாகவும் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2025.03.01 அன்று முற்பகல் 11.55 மற்றும் 11.58 மணியளவில் கல்னேவ பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பிரதான வீதியில் வைத்து 30,000/= (முப்பதாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரியமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் கல்னேவ பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலீஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.