வந்தாறுமூலை விவசாய சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரூ. 40,000/= (ரூபாய் நாற்பதாயிரம்) இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது

சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், துருக்கனமடு பகுதியில் முறைப்பாட்டாளரின் மனைவி பெயரில் உள்ள 3 ஏக்கர் நெற்பயிர் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த நெல்லுக்கு நட்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு 50,000/= ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்;ளதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் ஆணைக்குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கடந்த 2025.03.05 ஆம் திகதி காலை 9.44 மணியளவில் வந்தாறுமூலை விவசாய சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் செங்கலடி இலங்கை வங்கிக்கு முன்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

Search