நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டிருந்த வியாபார உரிமம் தொடர்பான விண்ணப்பம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வியாபார உரிமத்தினை வழங்குவதற்கு ஆவண செய்வதற்கு வேறு இரு நபர்களுக்கு ரூபா 2,000,000 (ரூபா 20 இலட்சம்) இனை இலஞ்சமாக வழங்குமாறு கோரியமை மற்றும் ரூபா 1,500,000 (ரூபா 15 இலட்சம் ) இனை இலஞ்சமாக கோரி பெற்றுக் கொள்வதற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் 2025.03.25 அன்று பி;.ப 1.20 மணியளவில்> இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 2025.04.01 வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார;.