முன்னாள் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) 24.04.2025 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஊவா மாகாண சபையால் பதுளை தேசிய சேமிப்பு வங்கியில் பராமரிக்கப்படும் நிலையான வைப்புத்தொகைகளை உரிய தேதிக்கு முன்னர் திரும்பப் பெறுவதன் மூலம், ஊவா மாகாண சபைக்கு கிடைக்கக்கூடிய வட்டி வருமானத்தை இழந்து ஊவா மாகாண சபைக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆணைக்குழுவின் வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற இல 01 இல் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.