வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் நவமுனி ஆராச்சிகே சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு இலஞ்ச சட்டத்தின் பிரிவு 70 இன் கீழான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்ப வடமத்திய மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனிப்பட்ட செயலாளரின் வாகனத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்தமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் குற்றங்கள் நிரூபனமானதின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்ற இலக்கம் 01 இன் தலைமை நீதிபதி கௌரவ ஆதித்ய படபெந்திகே அவரிகளினால் குற்றவாளியாக்கப்பட்டு 2025.04.02 ஆம் திகதி திறந்த நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்;டது.
அதன்படி முதல் குற்றவாளியான வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் இரண்டாவது குற்றவாளியான தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவரும் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக்கப்;பட்டு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையுடன் மேலும் தலா 200000/= (இரண்டு இலட்சம் ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கினை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சார்பாக பிரதி பணிப்பாளர் நாயகம் திரு. அசித அந்தோனி அவர்கள் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.