இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு ஒரு ஜீப்பை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, அதை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் முறையற்ற விதத்தில் பதிவு செய்து ஊழல் முறைகேடுகளைச் செய்ததமை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் கிரிவனாகாரய பகுதியின் கனத்த வௌவைச் சேர்ந்த ஒரு வியாபாரி 23.04.2025 அன்று வாரியபொல பகுதியில் வைத்து, ஊழல் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில்; இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 2025.05.02 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.