சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின சிறப்பு நிகழ்வுகள் - 2017

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமான டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியன்று ஆணைக்குழுவின் பிரதான நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலின் 'கிரேன்ட் மார்கீ' மண்டபத்தில் மு.ப 9.00 மணிமுதல் பி.ப 12.30 வரைக்கும் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வானது கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளின் 150 சிவில் சமூக உறுப்பினர்களின் பங்கேற்ப்புடனும் கொழும்பின் பல்வேறு பயிற்சி நிலையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 100 விடுகை வருட மாணவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.



குறிப்பாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய அம்சம் யாதெனில் இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை சட்டம் மற்றும் தண்டனைகள் வழங்குவதன் மூலம் மாத்திரம் இல்லாதொழிக்க முடியாது என்பதும் இது விடயத்தில் சமகாலத்தில் இலங்கையும் பிறநாடுகளும் தடுப்பு நிவாரண வேலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவானது இவ்வருட சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தினை 'நேர்மையானதும் ஊழலற்றதுமான தேசத்தை நோக்கி' எனும் தொனிப்பொருளில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பயிற்சி நிலையங்களில் விடுகை வருடத்தில் இருந்து அரச சேவைக்குள் நுழையக் காத்திருக்கும் பயிற்சி மாணவர்களினை விழிப்பூட்டி வழிநடாத்தும் வகையில் தடுப்பு நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இவ்வருட சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வுகள் இடம் பெற்றது.

ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான திரு. நெவில் குருகே அவர்கள் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் முக்கியத்துவத்தினை தெளிவுபடுத்தி தனது உரையினை உரை நிகழ்த்தினார்.

அதன் பின்பு 'இலங்கையில் நேர்மைத்திறனைக் கட்டியெழுப்புவதில் சமய ரீதியான பார்வை.' தொடர்பில் சர்வ சமயத் தலைவர்களின் சிறப்புரைகள் இடம் பெற்றது.

கலாநிதி. புஞ்சி நிலமே மீகஸ்வத்த அவர்கள் 'சரியானதை செய்யுங்கள், எளிதானதை அல்ல.' எனும் தலைப்பில் நிகழ்வில் விளக்கமளிப்பார்.
இலங்கை பொலிஸின் பாண்ட் வாத்தியக் குழுவின் கவர்ச்சிகரமான இசை நிகழ்ச்சி சிறப்பாக அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகள்USAID இன் ஜனநாயக ஆளுகை மற்றும் பொறுப்புக் கூறலை பலப்படுத்தும் கருத்திட்டம் (SDGAP) அனுசரணையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளுக்கு இணையாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவானது நாடளாவிய ரீதியில் அரசாங்க நிறுவனங்களினூடாக நேர்மைத்திறனைக் கட்டியெழுப்பும் வகையிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் நிமித்தம் சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்ஸ் விநியோக நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 2018 ஆம் ஆண்டிற்கான மேசைக்கலண்டர் மற்றும் சுவர் நாட்காட்டிகளானது ஒவ்வொரு பிரஜையும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படுவதன் அவசியத்தினை வலியுறுத்தும் வகையிலான செய்தியுடன் நிகழ்வில் கலந்து கொண்ட சகலருக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.
'இலஞ்சம் மற்றும் ஊழலிற்கு இல்லை என்று சொல்வோம்' எனும் வாசகமானது தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தொழில்நுட்ப உதவியுடன் 2017 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி அதன் சந்தாதாரர்கள் சகலருக்கும் அனுப்பும் வகை செய்யப்பட்டமை குறிப்பிடத்துக்கது.

 

ஊழலுக்கு எதிரான சர்வதேச தினத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உறுப்பினர் கௌரவ நெவில் குருகே, ஆணையாளர் III அவர்களின் விஷேட உரை.

இன்று ஊழலுக்கு எதிரான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கிணங்கவே ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஊழலுக்கு எதிரான சர்வதேச தினம் நினைவு கூறப்படுகின்றது. இலங்கை ஐக்கிய நாடுகள் தாபனத்தின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தில் கைச்சாத்திட்ட நாடு. நாம் அச்சமவாயத்தில் 2014 மார்ச் மாதம் 15 ஆம் திகதி கைச்சாத்திட்டோம். அச்சமவாயத்தில் கைச்சாத்திட்ட உலகில் 2 ஆவது நாடாகவும், ஆசியாவில் முதலாவது நாடாகவும் திகழ்கின்றோம். அதே போன்று அரசிலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தில் இடம் பெற்றுள்ளது நாம் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் வேண்டும். அத்துடன் எங்கள் அனைவரினதும் பெரும் பொறுப்பாகவுள்ளது யாதெனில் எமது நாட்டிலிருந்து ஊழலினை இல்லாதொழிப்பதற்கும் தடுப்பதற்குமுரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதனைப்பற்றியே இன்றைய தினத்தில் கலந்துரையாட வேண்டியுள்ளது. அதாவது ஊழலை எவ்வாறு தடுக்கலாம். எனக்கு ஞாபகம் இருக்கின்றது கடந்த வருடம், அதற்கு முன்னைய வருடம் ஊழலுக்கு எதிரான சர்வதேச தினம் நினைவு கூறப்பட்டது பிரதம அதிதிகளின் பிரசன்னத்துடன். ஆனால் இவ்வருடம் நாம் பிரதம சிறப்பு அதிதிகளாக விஷேட அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. இன்று இங்கு வருகை தந்துள்ள அனைவரினையும் நாம் பிரதம அதிதிகளாகவே கருதுகின்றோம். இன்று எமது தேசத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் போன்று சகல குற்றங்களும் அதிகரித்துள்ளமை நாம் யாவரும் அறிந்த ஒன்றே. மேற்படி குற்றங்களுக்கு எதிராக சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதும் ஒருவகையில் குற்றங்களை தடுப்பதற்குரிய காரணிகளில் ஒன்றே. எவ்வாறாயினும் குற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்கு அது மாத்திரம் போதாது என்பதுவே எனது அபிப்பிராயம். நாங்கள் தற்போது குற்றம் ஒன்று இடம் பெறும் வரை காத்திருந்து அதற்கு எதிராக செயற்படுவதனையே முன்னெடுக்கின்றோம். எமக்கு குற்றத்தினை தடுத்து நிறுத்த முடியும் எனின் அதனைவிட முக்கியமானதும் வரவேற்கத்தக்கதுமாகும். அதனையே நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. குற்;றங்கள் இடம் பெறுவது எக்காரணத்தினாலாகும் என்பதனை ஆய்வுகளின் மூலம் அறிய முற்பட்டோம். விஷேடமாக ஏன் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு மக்கள் உள்ளாகின்றார்கள் என ஆராய்ந்தோம். எமக்கு அறியக் கிடைத்தது அது மக்களின் இதயம் தூய்மையின்மை காரணமாகவே ஏற்படுகின்றது. ஒருவனுடைய மனது தூய்மையாக இருக்குமாயின் அந்நபர் ஒருபோதும் குற்றமொன்றினை மேற்கொள்ள முனையமாட்டார் என்பதனையும் அறிந்து கொண்டோம். சிலர் நினைக்கின்றனர் கல்வி மற்றும் அறிவு இருந்தால் எல்லாம் பூரணமாகிவிடும் என்று, ஆனால் நாம் கண்டிருக்கின்றோம் கல்வி இருந்தாலும், ஏராளமானோர் கல்விசார் குணங்களில் குறைபாடுடையவர்களாகவே உள்ளனர். அத்தகைய நபர்கள் தங்கள் கல்வியாற்றலை தவறுகளுக்காவே பயன்படுத்துகின்றமையை எம்மால் அறிய முடிந்தது. இத்தகைய தவறுகளை எவ்வாறு சீர் செய்வது என நாம் ஆராய்ந்தோம். எமக்கு அறியக்கிடைத்தது ஏராளமான பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு அறிவினை மாத்திரம் வழங்குவதற்கே பெரிதும் முயலுகின்றனர். கல்வி என்பது அறிவு மாத்திரமல்ல. கல்வி மூன்று பிரிவுகளையுடையது அறிவாற்றல், மனப்பாங்கு, திறமைகள் ஆகிய மூன்றும் பிள்ளைகளுக்கு வழங்கப்படுதல் வேண்டும். தற்போது என்ன நடந்துள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு அறிவாற்றலை வழங்குவதற்கே முயற்சிக்கின்றனர். மனப்பாங்குகள் நல்ல பண்புகளை வழங்குவதில் முயற்சிப்பதில்லை. நல்ல மனப்பாங்குகள் பிள்ளையின் உள்ளத்தில் விருத்தியடையாமையின் காரணமாக அப்பிள்ளையின் ஆற்றல்களால் தவறினை அறிய முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இன்று சமூகத்தில் ஏராளமானோர் அறிவினைப் பெற்று சிறந்த மனப்பாங்குகளை பின்பற்றாமையினால் தவறான பாதையில் திசை திருப்பப்பட்டுள்ளார்கள். இதனையே நாம் சீர் செய்தல் வேண்டும். இன்று அரசாங்க சேவையிலுள்ள ஏராளமானோர் தவறான மனப்பாங்குகளிற்கு இலக்காகியுள்ளனர். இதனால் அவர்களின் தவறான மனப்பான்மையை மாற்றுவது என்பது கடினமான காரியமாகும். ஆதலினால் நாம் தீர்மானித்தோம் சிறிய பிள்ளைகளிடத்தில் இருந்து இதனை ஆரம்பிப்பதற்கு. எனவே எமக்கு இதுவிடயத்தில் முதலில் பெற்றார்களை விழிப்புணர்வூட்டல் வேண்டும். எவ்வாறு சிறந்த மனப்பாங்குகளினால் நிரம்பப்பெற்ற பிள்ளைகளை உருவாக்குவது. பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் முதல் ஆசான்கள். பிள்ளைகளின் உடலியல் ரீதியான கவனிப்புக்களை மேற்கொள்வது போன்று நல்ல பண்புகளையுடைய பக்குவமான சமூகமயப்பட்ட பிள்ளைகளை உருவாக்குவது பெற்றோரின் தார்மீகப் பொறுப்பாகும். அத்துடன் பாடசாலை மூலமும் பிள்ளைகளிடத்தில் நல்ல பண்புகளை வளர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். பாடசாலைகளிலும் பிள்ளைகளின் அறிவினைப் போன்று நல்லொழுக்க விழுமியங்களை, பண்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதற்கான செயற்றிட்டத்தினையும் மேற்கொண்டு வருகின்றோம். எமது ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவிற்கிணங்க தேசிய மட்டத்தில் பல பாடசாலைகளில் 'நேர்மைக்குழுக்கள்' உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதனை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் எமது எதிர்பார்ப்பானது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துடன் நல்ல விழுமியப் பண்புகளையுடைய மாணவர்களை உருவாக்குவதாகும். இந்நிலைமையானது எதிர்காலத்தில் நேர்மைத்திறன்மிகு சமுதாயத்தினைக் கட்டியெழுப்ப உறுதுணையாய் அமையும் எனலாம். அத்தகைய சமுதாயமானது முற்றிலும் இலஞ்சமும் ஊழலுமற்ற சமுதாயமாக விளங்கும் எனலாம். இவ்வுயரிய நோக்கத்தினை நோக்கிப்; பயணிக்கும் எமது நீண்ட பயணத்திற்கு உங்களுடைய மகத்தான ஒத்துழைப்பு என்றென்றும் அவசியமாகும். இதுவே நாம் இன்று உங்களுக்கு வழங்கும் செய்தியாகும். நாம் அனைவரும் ஒன்றிணைவோம். எம்மிடத்தில் இருந்து இல்லாமல் சென்ற அந்நிலைமையை ஏற்படுத்த மீண்டும் திட்டமிடுவோம். தயவு செய்து எம்முடன் இணையுங்கள். அதற்கான எமது துரித தொலைபேசி இலக்கமான 1954 உடன் தொடர்பு கொண்டு மக்களை விழிப்பூட்டும் செயற்றிட்டங்களை ஏற்பாடு செய்வோம். இந்த ஒப்பற்ற கைங்கரியத்திற்கு உங்கள் அனைவரினதும் மகத்தான ஒத்துழைப்பினை எதிர்பார்கின்றோம். இவ்வுன்னதமான செயற்பாட்டின் மூலம் இலஞ்சமும் ஊழலுமற்றதும் ஏனைய குற்றங்களில் இருந்து நீங்கியதுமான சிறந்த சமுதாயம் உருவாக வேண்டும் என பிரார்த்தித்து விடைபெறுகின்றேன்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search