CIABOC இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை மக்கள்மயப்படுத்தும்நிகழ்வு

web2016 ஆம் ஆண்டின்12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஏற்பாடுகளை கருத்திற் கொண்டு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் மேம்படுத்தப்பட்ட புதிய உத்தியோகபூர்வ இணையத்தளம் 2017 டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டமையின் மூலம் மக்கள் மயப்படுத்தப்பட்டது. இச்சிறப்பான நிகழ்வானது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் கௌரவ தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ரீ. பீ. வீரசூரிய, கௌரவ ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சித் லால் சில்வா, ஆணையாளர் கௌரவ நெவில் குருகே மற்றும் பணிப்பாளர் நாயகம் திரு. சரத் ஜயமான்ன, சனாதிபதி சட்டத்தரணி ஆகியோர் தலைமையிலும் சிவில் அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பங்குபற்றுதலுடனும் சிறப்பாக நடைபெற்றது.


இதில் குறிப்பிடத்தக்க விஷேட அம்சம் யாதெனில் இலங்கையின் அரச நிறுவனங்களின் இணையத்தளங்களில் இதுவரைக்காலத்திலும் இடம் பெற்றிராத பல்வேறு விஷேட அம்சங்கள் உள்ளடங்கப்பெற்றதாய் இணையத்தளம் வெளிவருகின்றமையாகும். குறிப்பாக பல்வேறு விதத்திலும் வித்தியாசமான இயலுமையுடைய தரப்பினரின் தேவைகளையும் கருத்திற் கொண்டு (கண்பார்வை இழந்தோர் குரல் மூலம் தகவல் வழங்க, செவிப்புலம் மூலம் தகவல் பெற, நிறமாற்றம் செய்து விசாலமாக்கி பார்வையிடக் கூடியதாய்) சகல தரப்பினருக்கும் வினைத்திறன்மிக்க முறையில் பயன்படுத்தக்க வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் வெளிவருகின்றமையாகும்.
அத்துடன் பொது மக்கள் வேறுபட்ட 8 விதமான வழிகளின் மூலம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவிற்கு எச்சந்தர்ப்பத்திலும் முறைப்பாடு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.

அதுமட்டுமல்லாது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின்புலனாய்வுப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் சுற்றி வளைப்புக்கள் தொடர்பிலும், நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்படும் வழக்குகள் தொடர்பிலும், நீதிமன்ற வழக்குத் தீர்ப்புக்கள் மற்றும் தடுப்பு நிவாரண நடவடிக்கைகள் தொடர்பிலும் இற்றைப்படுத்தப்பட்ட சகல தகவல்களையும் உடனுக்குடன் இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் சர்வதேச தொடர்புகள், பயிற்சிப்பட்டறைகள் தொடர்பான பல்வேறு தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடிவதுடன், இவ்விணயத்தளமானது விஷேடமாக சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என சகலரையும் கருத்திற் கொண்டதாக பல்வேறு விஷேடமானதும் தனித்துவமானதுமான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளமை சிறப்பாக குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் சமகால நிகழ்வுகள் தொடர்பில்உடனுக்குடன் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இணையத்தளம் : www.ciaboc.gov.lk
மின்னஞ்சல் :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
துரித தொலைபேசி இல: 1954, 0112596360

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search