கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் முறைப்பாட்டாளர் காத்திருந்த வேலை அவரை பரிசோதித்து அவர் சட்டவிரோத நடவடிக்கையினை மேற்கொள்ள வந்தார் என குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க ரூபா 20000.00 கோரி, முறைப்பாட்டாளரின் கையடக்க தொலைபேசி மற்றும தேசிய அடையாள அட்டையினை பொலிஸ் அலுவலர் தனது பொறுப்பில் வைத்துக் கொண்டதுடன் முதலில் ரூபா 10,000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு முறைப்பாட்டாளருக்கு கையடக்க தொலைபேசி மற்றும தேசிய அடையாள அட்டையினை மீள ஒப்படைக்கும் போது பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் கான்ஸ்டபல் 74317 ஆன கீகியனகே நிலூக பெரேரா என்பவரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இவ் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2018.04.09 ஆம் திகதி கைது செய்தனர்.