1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்திற்கான திருத்தங்களை கொண்டுவரும் நோக்கில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது 3 நாள் வட்ட மேசை கலந்துரையாடலினை மார்ச் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ஆணைக்குழுவின் சிறிய கேட்போர் கூடத்தில் நடாத்தியது.
கலந்துரையாடலானது பிரதான அரச நிறுவனங்களின் சிரேஷ்ட மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும்,சர்வதேச உபாயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அபாயகர மருந்துகள், குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC) மற்றும் திருடப்பட்ட சொத்து மீட்புத் திட்டம் (StAR) சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படத்தலில் சர்வதேச அனுபவங்களின் அடிப்படையில் சிறப்புக் கலந்துரையாடல்கள் மற்றும் வினைத்திறன்மிக்க முன்வைப்புக்களுடனான கலந்துரையாடல்களின் ஊடாக சொத்துக்கள் வெளிப்படுத்தல் மற்றும் சரிபார்ப்பில் உலகலாவிய நடைமுறைகளின் அனுபவத்திற்கு இணங்க திருத்தங்கள் ஆராய்வுக்குற்படுத்தப்பட்டன. இக்கலந்துரையாடலானதுCIABOC ஐக்கிய நாடுகள் சபையின் அபாயகர மருந்துகள், குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC) மற்றும் திருடப்பட்ட சொத்து மீட்புத் திட்டம்(StAR) உலக வங்கி (WB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.