இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவும், UNODC மற்றும் UNDP முதலான மூன்று நிறுவனங்களும் இணைந்து கடந்த ஜூலை 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை கொழும்பில் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமான மாநாட்டை நடாத்தியது. இம்மாநாடானது 2012 ஆம் ஆண்டில் ஜகார்த்தாவில் வெளிப்படுத்தப்பட்ட பிரகடனத்தை மேலும் பலமிக்கதாய் மாற்றும் இலக்குடன் கொழும்பு பிரகடனத்தை தயாரிக்கும் நோக்குடனாகும். ஜகார்த்தா பிரகடனத்தின் நோக்கமானது ஊழலுக்கு எதிராக உலக நாடுகளில் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களை உண்மையிலேயே பலமிக்கதாகவும், சுயாதீனமானதாகவும் மாற்றுவதற்கான வழிகளை கலந்துரையாடுவதற்காக முன்னெடுக்கப்பட்டதாகும். அப்பிரகடனத்தில் 16 பிரிவுகள் உள்ளடங்கப்பெற்றுள்ளன. ஜகார்த்தா பிரகடனம் வெளியிடப்பட்டதன் பிரதான நோக்கம் ஐ.நாவின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் விதிமுறைகளுக்கு தெளிவான அர்த்தத்தை கொடுப்பதற்காகவாகும்.
கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் பிரதம அதிதியாக பங்குபற்றிய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உரை நிகழ்த்தும் போது இலங்கையிலிருந்கு இலஞ்சம் மற்றும் ஊழலினை இல்லாதொழிப்பதற்கான உயரிய இலக்கு தனக்கிருப்பதாகவும். என்னுடை எதிர்பார்ப்பானது உலகில் ஊழலினை இல்லாதொழித்த நாடுகளின் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதாகும் என்றார். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வெளிப்படுத்துகை, அர்ப்பணிப்பு மற்றும் அரசியல் அபிலாசையானது சர்வதேச நிபுணர்களின் பாராட்டுதல்களுக்கும், வரவேற்ப்புக்கும் உரித்தானது. இந்த மாநாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அலுவலர்களின் பாவணைக்காக 'புலனாய்வு வழிகாட்டி' கைந்நூலும் முறைப்பாடுகளை முன்னெடுக்கும் சட்ட உத்தியோகத்தர்களின் பாவணைக்காக முறைப்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான 'முறைப்பாடுகள் வழிகாட்டி”கைந்நூலும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்ந மாநாட்டிற்காக உலகின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 க்கும் அதிகமான நாடுகளின் நிபுணர்கள், தொழில் வல்லுனர்கள், கல்வியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டதுடன் அவர்கள் ஆக்கபூர்வமான, உயிரோட்டமிக்க பலசுற்று கலந்துரையாடல்களில் பங்குபற்றி; மிகவும் பயனுள்ளதும், அர்த்தமிக்கதுமான ஆலோசனைகளை வழங்கினர்.
அவர்களின் பிரதான இலக்காக அமைந்தது யாதெனில் ஊழலுக்கு எதிரான நிறுவனங்;களில் வழக்குத் தொடரல் மற்றும் புலனாய்வுகளை முன்னெடுப்பது மாத்திரமன்றி தடுப்பு நிவாரண முறைமைகள், கல்வி வழிகாட்டல் முறைமைகளை தங்களுடைய செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் உள்ளீர்த்துக் கொள்வதாகும். அதுமாத்திரமல்லாது அந்நிறுவனங்கள் சுயாதீனமானதாக இருப்பதுடன், அதற்கு ஒட்டு மொத்த அரச மற்றும் சமூக ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெறுதல் வேண்டும். மிகவும் பிரதானமாக கலந்துரையாடலுக்குற்பட்ட விடயம் யாதெனில் ஊழலுக்கு எதிரான நிறுவனங்;களின் நிதி ஒதுக்கீடானது நிர்வாக சேவை அதிகாரிகளின் முகாமைத்துவத்தின் கீழிருக்கும் அரச நிறுவனங்களில் அல்லாது நேரடியாக பாராளுமன்றத்தினதோ அல்லது அரசிலமைப்பினடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனத்தினால் கண்காணிக்கப்படுமாயின் இந்நிறுவனங்களுக்கான போதுமானளவு நிதியை ஒதுக்குவதற்கு முடிவதுடன், தேசிய வரவு செலவுத்திட்டத்தினூடே ஆகக் குறைந்தது 0.1%ஆகவாவது இருத்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
ஏனென்றால், இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதனை திறமையாகவும், சுயாதீனமானதாகவும் முன்னெடுப்பதற்காகவாகும். தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பிலான முறையான பாவணை பொருத்தமானதும் ஏற்றங்கீரிக்கப்பட்டதுமான கணக்குப்;பரிசோதணைக் குற்படுதல் வேண்டும். அத்துடன் மாநாட்டில் விஷேடமான அவதானத்திற்குற்பட்ட விடயம் யாதெனில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்கள் தொடர்பில் தேவையானளவில் மனித வளம் அதாவது ஆளணித் தொகுதியை தெரிவு செய்வது தொடர்பிலான அனுமதியை வேறு அரச நிறுவனங்களின் எவ்வித தலையீடுகளுமின்றி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வழங்குதல் வேண்டும்.
மேலும், ஆட்சேர்ப்பு செய்யப்படும் அலுவலர்கள் உயர் திறன்களையுடைய நிபுணர்களாக இருத்தல் வேண்டும். மேலும், இவ்ஆணைக்குழுவானது பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புடையதாவும் ஊடகங்களுடனும் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதிலும் தகவல்களை வெளிப்படுத்துவதிலும் நெருங்கியும் நம்பிக்கைக்குரியதாகவும் செயற்படுதல் வேண்டும். காரணம் யாதெனில் ஆணைக்குழுக்களுக்கு சில சந்தர்ப்பங்களி;ல் ஏற்படக் கூடிய அபாயகர அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்காகவாகும்.
இந்த மாநாட்டின் காரணமாக இலங்கையின் பால் சர்வதேச கவனம் செலுத்தப்பட்டதுடன் விஷேடமாக சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து நெருங்கிய உறவைக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச சமூகத்துடனான எதிர்கால தொடர்புகளுக்கும் ஓர் உன்னத களமாக அமையப்பெற்றது எனலாம்.