30க்கும் அதிகமான நாடுகளின் நிபுணர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்ட கடந்த மூன்று நாட்களில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களினூடே, ஊழலுக்கு எதிரான நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் அவற்றின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவற்கும் பல்வேறு வழிமுறைகள் ஆய்விற்குற்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கத்திற்கு பொதுத்துறை அலுவலர்களின் உயர்தர நடத்தைகள், சுயாதீனத்தன்மை, நிதிக்கையாளுகை, பொதுமக்கள் தொடர்பு, வெளிப்படைத்தன்மை முதலானவற்றின் அவசியம் பெறுமளவில் வலியுறுத்தப்பட்டதுடன் உலகலாவிய அனுவபங்களினூடே இலங்கையின் நிலைமையை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிகள் அறிமுகம் செய்யப்பட்டன.