இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிமற்றுமொரு திருப்பம்: சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல்களை முகாமை செய்ய மையப்படுத்தப்பட்ட நிறுவனம்

நினைவுக்கெட்டிய காலப்பகுதியிலிருந்து உறக்கத்திலிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்கு(இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு) இன்று மீள் எழுச்சி பெற்று கடந்த காலநிலைமையை மாற்றி வருகின்றது.

2015 தேர்தல் வாக்குறுதிகளால்முன்னுரிமை அளிக்கப்பட்ட; ஆணைக்குழு தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத தேசத்தினை உருவாக்கும் பணியினை கச்சிதமாய் முன்னெடுத்து வருகின்றது. சிதறிய திட்டங்களும், பொறுப்புக்களும், பொறுப்புணர்வுகளும் தற்போது தீவிர முயற்சிகளுக்கு உட்பட்டுள்ளன. கடந்த காலங்களைப் போல், தற்போது சட்ட அமுலாக்கம் தொடர்பில் பேசுவதற்கு இடமளிக்காவகையில் வெளிப்படைத்தன்மையுடன் ஆணைக்குழுவின் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவாறாக ஆணைக்குழுவானது புதிய திருப்பங்களுடன் பயணிக்கின்றது. இதுவரைக்காலமும் திருத்தப்படாதிருந்த இலஞ்ச சட்டத்தை அரசியல் தலையீடுகளற்ற நிலையில் திருத்தவும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது நாட்டு மக்களுக்கு கிடைத்த ஒப்பற்ற வெற்றியாகும். சட்டத்தை திருத்துவதை மாத்திரம் கருத்திற் கொள்ளாது மக்கள் மனங்களில் மனங்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான சிந்தனையை வளர்க்க பல்வேறு ஆக்கபூர்மான நடவடிக்கைகளையும் எமது சட்டத்துறை அலுவலர்கள் உன்னத பணியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தொடர்பில் பேசும் போது சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டம் மிகவும் முக்கியமானதொன்றாகும்.

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 இன் 01 ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டமாக கருதப்படும் சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டம் 1994 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கம் இலஞ்ச (திருத்த) சட்டத்தின் மூலம் அரச உத்தியோகத்தரகள் தொடர்பில் வரையறை செய்கின்றது. அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க நிறைவேற்று ஆளணியினரின் தன்வருமானத்திற்கு மேலதிகமாக முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரிப்பதை தடுக்கவும், அவ்வாறு சேர்த்தசொத்துக்களை அபகரிக்கவுமே இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இவை கால ஓட்ட நகர்வில் மாற்றமடையலாம். ஆனால் அது எமது சமுதாயத்தில் யதார்த்தமாக்கப்படவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

இருப்பினும், இலஞ்சம் ஊழல் ஆணைக்குழு கடந்த கால கறைப்படிந்த நிலைமைக்கு முற்றுப்பள்ளி வைத்து இச்சட்டத்தை திருத்துவதற்கு முன்வந்து முனைப்புடன் செயற்படுகின்றது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கிளின் புரட்சிகரமான இந்த பயணம் நாளைய வெற்றிகரமான இலங்கையை உருவாக்கவும் சட்டம் மற்றும் கலாசார ரீதியான திருப்பத்தினை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான நல்லதோர் ஆரம்பம் எனலாம்.

இவ்வகையில் திருத்தப்படும் சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தினை மக்கள் மயப்படுத்தும் வகையில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கள் இவ்வாறாக கருத்து தெரிவித்தார்.

சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் ONLINE இனூடாக.

பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்த நிலையில் நவீன முறைமையை அறிமுகப்படுத்தியுள்ள ஆணைக்குழுவானது அடைந்த வெற்றிகளில் இன்னுமொன்றாக பதிவாகின்றது நிவாரண வேலைத்திட்டமாகும். இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது இலஞ்சம் மற்றும் ஊழலை தடுத்து நிறுத்துவதும் ஒப்பற்ற பணியாகும். ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சிறப்பாக்க நிபுணத்துவ புலனாய்வு அலுவலர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னேறிய சமுதாயத்தின் உருவாக்கம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அதற்கான காலடியை ஆணைக்குழு உறுதியாக வைத்து முன் செல்கின்றது. சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் திருத்தம் மூலம் அதனை அறிய வாய்ப்பாகியது எவ்வாறு ஒரு பாக்கியமாக இல்லாது போகும்?

 

சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் மேலான்மைக்கு மையப்படுத்தப்பட்ட நிறுவனம்.

இவற்றுடன் தண்டனை முறைமைகளையும் மறக்கவோ விட்டுச்செல்லவோ முடியாது. அவ்வாறான தண்டனைகளும் அவசியம். அவ்வாறில்லாவிடின் திருத்தப்படும் சட்டத்தில் பயன் இல்லை.

 

திருத்தப்பட்டுள்ள தண்டனைகள் !

ஆஷிகா ப்ராஹ்மன / நிசாந்த பிரியதர்ஸன

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search