CIABOC இன் மற்றுமொரு மைல்கல் நிகழ்வு 'நேர்மைத்திறனுக்கு இளைஞர்கள்' எனும் தொனிப்பொருளில் அவிஸ்ஸாவெல படங்கல இளைஞர் சேவை பயிற்சி மையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது இளைஞர் விவகார அமைச்சுஇ, அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கம், தேசிய இளைஞர் பேரவை மற்றும் பல நிறுவனங்களின் உதவியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையின் 25மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் கழகங்களின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. சரத்ஜயமான்ன(PC)அவர்கள் இலஞ்சமும் ஊழலுமற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் வகையிலான சிறப்பு விரிவுரையினை மிகவும் சுவாரஸ்யமான முறையில் மேற்கொண்டு இளைஞர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்தார்.