நாட்டின் நீண்ட கால தேவையொன்றாக கருதப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயல்திட்டத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து யு. எஸ்.எய்ட் நிறுவனத்தின் அனுசரணையில் நாடு தழுவிய அடிப்படையிலான சுமார் 30 கலந்துரையாடலகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புக் கலந்தரையாடலொன்று அண்மையில் அரச நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் பாராளுன்றத்தில் நடைபெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றுதலுடன் டிசம்பர் 09 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லததொழிப்பதற்கான தேசிய செயல் திட்டம் வெளியிடப்படுவதினூடாக மக்கள் மயப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.