ஜனாதிபதிச் செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) திருத்தச் சட்டமூலம் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த திருத்தச் சட்டம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கீழ் முன்னெடுக்கப்படும் இலஞ்ச, ஊழல் குற்றம், சொத்துக்கள் பொறுப்புக்கள் விசாரணை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுக்களினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்தான தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் அதாவது மீள விசாரணை மேற்கொள்ளாது ஆரம்ப விசாரணைத்தகவல்களை பெற்று வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலேயே திருத்தம் மேற்கொள்ளப்ப்ட்டுள்ளமை குறிப்பிடததக்கது. இது வீணான தாமதத்தினை இல்லாமல் செய்து விசாரணைகளை துரிதப்படுத்த உதவும் எனலாம்.