கனடாவின் ஒட்டாவ நகரில் 2019 மே மாதம் 29-31 வரை நடைபெற் திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் CIABOC இன் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரிணி சரத் ஜயமான்ன அவர்கள் இலங்கை குழுவை பிரதிபலிக்கும் வகையில் கலந்து சிறப்பித்தார். இலங்கையின் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்ற வகையிலும், ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான விதிகளின் அடிப்படையில் முன்னெடுக்கும் வகையில் பொறுப்பு வாய்ந்த அலுவலராக சனாதிபதியின் செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே, இலங்கையியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அவர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான உச்சிமாநாட்டின் குறிக்கோள்களாக அறிவினைப் பகிர்தல் , சவால்களை இனங்காணல் மற்றும் திறந்த அரசாங்கங்களுக்கான தீர்வுகளை வெளிப்படையாகக் கண்டறிதல் முதலானவையாகும். இது அங்கத்துவ அரசாங்கங்கள், சிவில் சமூக குழுக்கள், சர்வதேச நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் பிறதுறைகளிலிருந்தான பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்து எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான சர்வதேச இணைப்பிணை வழங்கியது.
.2019 மே மாதம் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, CIABOC இன் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கள் உரை நிகழ்த்தினார். அவரது உரையானது சொத்து மீட்பு, மீட்பு தொடர்பான பரஸ்பர கற்றல், மீளவொப்படைப்பு, மற்றும் கண்காணிப்பு பற்றிய களரீதியான அனுபவப்பகிர்வுகளை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. இந்த அமர்வானது பல்வேறு அதிகார வரம்புகளில் சொத்துக்கள் மீட்பு மற்றும் பயன்பாட்டின் வௌ;வேறு விளைவுகளுக்கு காரணமான காரணிகள், ழுபுP செயல்முறைகளில் சொத்துக்களை மீட்டெடுக்கும் நாடுகளுக்கான முக்கிய படிப்பினைகள், சொத்துக்கள் மீட்பு தொடர்பில் எதிர்கொள்ளும் இடையூறுகளை அகற்றுவதில் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச வலையமைப்புக்களின் பங்கு போன்ற கேள்விகளை அலசி ஆராய்ந்தது. பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் உள்ளுர் அரசியல் நிலைமைகளால் நம்பகமான பயன்பாட்டைக் குறைமதிப்பிற்குள்ளாக்கியமையை வெளிப்படுத்தியது.
உலகளாவிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய நபர்களான அதன் தலைவர் டெலியா ஃபெரீரா, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் மற்றும் பல முக்கிய நபர்களை பணிப்பாளர் நாயகம் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. குறித்த கலந்துரையாடல்களின் போது, ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் சர்வதேச ஒத்துழைப்பு, இலங்கையில் ஊழல் தடுப்புச் சட்டங்களில் திருத்தங்கள், இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அமுலாக்குதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடலுக்குற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான உச்சிமாநாட்டின் நிறைவின் பின்பு 2019 ஜூன் மாதம் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் பணிப்பாளர் நாயகம் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட பல பிரதிநிதகளுடன்; விஸேடமாக பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் அரசாங்கங்களுக்கிடையிலான மற்றும் வெளி உறவுகள் பிரிவு ஆய்வாரளர்களுடனும் கனடிய புலனாய்வுப்பிரிவினர் மற்றும் நிபுணர்களுடன் இருபக்க கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் இலங்கையில் ஊழல் தடுப்புச் சட்டங்களில் திருத்தங்கள், இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அமுலாக்குதல் மற்றும் எதிர்காலத்தில் தொழில் நுட்ப மற்றும் நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் வெற்றிகரமான முயற்சியாக மேற்படி கலந்துரையாடல்கள் அமையப்பெற்றது எனலாம்.
CIABOC இன் பணிப்பாளர் நாயகம் திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் சொத்து மீட்பு குறித்து உரையாற்றும் போது : மீட்பு தொடர்பான பரஸ்பர கற்றல், மீளவொப்படைப்பு, மற்றும் கண்காணிப்பு பற்றிய களரீதியான அனுபவப்பகிர்வுகள்.
இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் - 2019-2023> அதன் பிரதியொன்றை CIABOC இன் பணிப்பாளர் நாயகம் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் டெலியா பெரீராவுக்கு வழங்கிய சந்தர்ப்பத்தில்..
இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் - 2019-2023, பிரதிகளை CIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்கள் திருமதி ஜெக்கலீன் பலும்போ> பணிப்பாளர் (பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் சைபர் பிரிவு), சர்வதேச ஒத்துழைப்புக் குழு, கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் அசோகா கிரிஹகாமா (இடது) மற்றும கௌரவ நீதிபதி திரு. ஜார்ஜஸ் ஐன்மெல்க் (ஆய்வாளர், அரசாங்கங்களுக்கிடையிலான மற்றும் வெளி உறவுகள் பிரிவு ஆய்வாளர் ஆகியோருக்கு 2013 ஜுன் மாதம் 03 ஆம் திகதி கனாடாவில் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
CIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்கள் திருமதி கரீனா போட்டின்> சட்ட அலுவலர்> குற்றவியல் பாதுகாப்பு> இராஜதந்திர சட்டப் பிரிவு> சர்வதேச அலுவல்கள் தொடர்பான கனடாவின் ஒட்டாவா அலுவலகத்தில் வைத்து 2019 ஜுன் 04 ஆம் திகதி சந்தித்த சந்தர்ப்பத்தில்.