மடாடுகம கல்கிரியாகம பகுதியின் விவசாய அமைப்புகளின் அதிகாரிகளுக்கான இரண்டு விழிப்புணர்வு திட்டங்கள் முறையே 2019/12/26 மற்றும் 2019/12/27 ஆகிய திகதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அலகமுவ தொகுதி அலுவலகம் மற்றும் மகாவலி அதிகாரசபையின் கல்கிரியாகம தொகுதி அலுவலகத்தில் நடத்தப்பட்டன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் இலஞ்ச ஊழல் எதிர்ப்பில் பொதுமக்களின் பொறுப்பு வலியுறுத்தப்பட்டது. 2019/12/26 அன்று மதியம் 1.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இப்பகுதியில் உள்ள மகாவலி அதிகார சபையின் அரசு அதிகாரிகளுக்கான மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி அலகமுவ தொகுதி அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இந்த அமர்வில் இலஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து தடுக்கப்பட வேண்டிய அரசு ஊழியர்களின் பொறுப்பு மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றத்திற்காக தண்டனைகள் அதன் பாரதூர விளைவுகள் சுட்டிக்காட்டப்பட்டன. பங்குபற்றுனர்கள் இந்த நிகழ்ச்சித் திட்டங்களினூடாக கேள்விகளைக் கேட்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டதுடன் பெரிதும் ஆர்வத்துடன் பங்குபற்றினர். இந்த நிகழ்ச்சிகளை மகாவலி ஏற்பாடு அதிகார சபை ஏற்பாடு செய்ததிருந்தது. ஆணைக்குழுவின் சார்பில் உதவி பணிப்பாளர் சட்டம் திரு. சகித விக்ரமரத்ன மற்றும் ஊழல் பிரிவு IV நிலையப் பொறுப்பதிகாரி திரு. யு.பி. விக்ரமாரச்சி ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.