ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) ஆகியவற்றுக்கு இடையிலான கல்விசார் உடன்பாடு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக 21.11.2022 ஆம் திகதி ஒரு கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கும் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் இடையில் 2023 பெப்ரவரி 20 ஆம் திகதி உலக சமூக நீதி தினத்தை அடிப்படையாகக் கொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பிரதான கேட்போர் கூடத்தில் அதன் தவிசாளர் கௌரவ நீதியரசர் ஈவா வனசுந்தர, ஆணையாளர் II கௌரவ நீதியரசர் தீபாலி விஜேசுந்தர, ஆணையாளர் III திரு சந்திர நிமல் வாகிஷ்ட மற்றும் பணிப்பாளர் நாயகம் திரு. W.K.D. விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி (அதன் பதில்) உபவேந்தர் பேராசிரியர் உபுல் சுபசிங்க, மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த மற்றும் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் இருந்து கலாநிதி சாந்த கம்லத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்துடன் இணைந்து பல்கலைக்கழக சமூகத்தில் நேர்மையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளை ஏற்பாடு செய்யும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் ஊழல் தொடர்பான பிரச்சினைகளில் இளைஞர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதும், பல்கலைக்கழக அமைப்பில் இளைஞர்களிடையே சமூக பொறுப்பை உருவாக்குவதும் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தில் மிக உயர்ந்த அளவில் நேர்மையாகச் செயல்படுவதற்கான ஒருமைப்பாட்டை உறுதி செய்து மேம்படுத்துவதாகும்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search