"வெற்றிப்பதிவாகிய CIABOC மற்றும் UNDP இனால் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக தமிழ் மொழி மூலம் நடத்திய பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிரத்தித் திட்டம் UNDP இணைந்து முதன்முதலாக தமிழ் மொழி மூலம் கிழக்கு மாகாணத்தில் நடத்திய பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி (TOT) மாபெரும் வெற்றிப்பதிவாகியுள்ளது.

பொதுச் சேவையில் நேர்மைத்திறனை நிலைநிறுத்துவதை இலக்காகக் கொண்ட ஐந்தாண்டு தேசிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இலட்சியப் பயணத்தில், (CIABOC) மற்றும் UNDP ஆகியவை கலாச்சார மற்றும் மொழி ரீதியாக மாறுபட்ட கிழக்கு மாகாணத்தை அடைந்தன. இது (CIABOC) இன் அரசு ஊழியர்களை ஊழல் எதிர்ப்பு பயிற்சியாளர்களாகப் பயிற்றுவிக்கும் நான்காவது செயன்முறையாகும். திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணம் கணிசமான தமிழ் பேசும் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. எனவே> UNDP மற்றும் CIABOC ஆகியன உள்ளுர் மக்களில் கணிசமான பகுதியை சென்றடைவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, முழு நிகழ்ச்சியையும் தமிழில் நடத்தின.

செழுமையான இனப் பன்முகத்தன்மை மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற கிழக்கு மாகாணத்தில், அதன் மக்கள் அன்றாட வாழ்வில் எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மூன்று நாள் வதிவிட பயிற்சித்திட்டத்தின் போது, திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பிரதேச செயலாளர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் புதிய ஏற்பாடுகள் அறிமுகப் படுத்தப்பட்டதுடன், ஊழலை தடுப்பதற்கான நீண்டகால உத்திகள் ஆழமாக ஆராயப்பட்டன.

கொளரவ முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியும், CIABOC இன் இரண்டாவது ஆணையாளருமான திருமதி.தீபாலி விஜேசுந்தர ஆற்றிய முக்கிய உரையானது, நடத்தை மாற்றத்திற்கான கூட்டு வலியுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டியது. இது அரச சேவையில் வேரூன்றியுள்ள தவறான மனப்பாஙகு;களை சவாலுக்கு உட்படுத்தியது. குறிப்பாக ஊழலுக்கு நிகரான பிரச்சினைகள் புற்றுநோயைப் போல நயவஞ்சகமானவை மற்றும் திறம்பட சமாளிக்க முடியாது என்ற நம்பிக்கையை நீக்கியது. சர்வதேச எடுத்துக்காட்டுகளை வழங்குவதன் மூலமும், சிறந்த நடத்தைகள் தொடர்பாக விளக்கியதன் மூலமும், அரச அதிகாரிகளின் நடத்தையை வடிவமைப்பதன் முக்கியத்துவத்தை அவர் தெளிவுபடுத்தினார்.

CIABOC இன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி. ரஞ்சனி செனவிரத்ன அவர்கள், ஒருவரின் முழு வாழ்க்கையிலும் நேர்மையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விரிவுரையொன்றை நிகழ்த்தினார். இந்த விரிவுரையை அவர் தனது சொந்த வாழ்க்கையிலிருந்து முன்மாதிரியான எடுத்துக்காட்டுக்கள் மூலம் விளக்கினார்.

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCAC), "தடுப்பு நிவாரணம்" என்பது விவாதங்களின் மையக் கருப்பொருளாக இருந்தது. பங்கேற்பாளர்கள் பகிரப்பட்ட சிக்கல்கள் மற்றும் அபாயங்களைப் புரிந்துகொள்வதுடன், சக ஊழியர்களிடையே நேர்மையை மேம்படுத்துவதன் மூலம், அரச ஊழியர்களாக தங்கள் பாத்திரங்களில் இந்தக் கொள்கையை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதை ஆராய்ந்தனர்.

திருகோணமலை அரசாங்க அதிபர் திரு.சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்கள், அரச ஊழியர்களின் உன்னத கடமையை தெய்வீக அழைப்பு என வலியுறுத்தி நெஞ்சை உருக்கும் சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை நெறிப்படுத்தும் CIABOC இன் சட்ட உதவிப் பணிப்பாளர், திரு. சால்தீன் எம்.சப்ரி, மூன்று நாள் நிகழ்ச்சித்திட்டத்தின்; போது பெறுமதிமிக்க வளவாளராகச் சேவையாற்றினார். மேலும், ஊழல் சட்டத்தில் நிபுணரான உதவிப் பணிப்பாளர் நாயகம் செல்வி தனுஜா பண்டார புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் (SLIDA) ஆலோசகரான திரு. சு. ருஷாந்தன், தனது விரிவான வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், சிறிய நடத்தை மாற்றங்கள் எவ்வாறு முறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது பற்றிய அர்த்தபூர்வமான விரிவுரையை வழங்கினார்.

புகழ்பெற்ற மனித உரிமை செயற்பாட்டாளரும், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளருமான திரு. ஜகத் லியனாராச்சி, நேர்மைக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய நுண்ணறிவுமிக்க விரிவுரையை வழங்கினார். அவர் தனது கருத்துக்களை சர்வதேச எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிறதுடன், இந்த முக்கியமான தொடர்பைப் பற்றிய பார்வையாளர்களின் புரிதலை மேம்படுத்தினார்.

அனைத்து பிரதேச செயலாளர்களும் குழுச் செயற்பாடுகள் மூலம், நேர்மை, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் பற்றிய அறிவினையும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்றியமையாத பணிகளான UNCAC இன் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட கொள்கைகளையும் திறம்பட வெளிப்படுத்தும் திறமையையும் பெற்றனர்.

நிர்வாகப் பணிப்பாளர் திரு.ஏ.எம்.ஆர்.எஸ்.ஏ.அதிகாரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங’களின் அதிகாரிகளையும் திறமையாகக் கண்காணித்து, அவர்களை ஒன்றிணைத்து விலைமதிப்பற்ற சேவையை ஆற்றினார்.

CIABOC இன் தடுப்பு நிவாரணப்பிரிவு, அமர்வுத் திட்டத்தை உன்னிப்பாக வடிவமைத்து, முழு நிகழ்வையும் நிபுணத்துவத்துடன் நிர்வகித்தது. தூரம் மற்றும் மொழி போன்ற சவால்களை முறியடித்து, இந்த மூன்று நாள் வதிவிட பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, பிராந்தியத்தில் நேர்மைத்திறனை வளர்ப்பதற்கும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்குமான தங்கள் அர்ப்பணிப்பை CIABOC வெளிப்படுத்தியது.

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

1116 1

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search