வியன்னா நகரில் இடம்பெற்ற ருNழுனுஊ-ருNஊயூஊ அமர்வூகளில் இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் உலக வங்கியின் பிரதிநிதியை சந்தித்தனர்

இலங்கைக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்யூம் ஆணைக்குழுவின் (ஊஐயூடீழுஊ) பிரதிநிதிகள் வியன்னா சர்வதேச மையத்தில் நடைபெற்ற ருNழுனுஊ-ருNஊயூஊ அமர்வூகளில் கலந்துகொண்டதுடன்இ இப் பிரதிநிதிகள் குழு ஆணைக்குழுவின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால முயற்சிகள் தொடர்பாக செப்டம்பர் 4 ஆம் தேதிஇ உலக வங்கியின் மூத்த நிதித்துறை நிபுணர் லாரா பாப்பை சந்தித்து கலந்துரையாடியது.

இந்த சந்திப்பின் போதுஇ ஊஐயூடீழுஊ இன் தலைவர் நீதிபதி நீல் இத்தவலஇ ஊஐயூடீழுஊ ஐ மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்துவது தொடர்பான மத்தியமயப்படுத்தப்படுத்தப்பட்ட அமைப்பொன்றை நிறுவூதல் உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்கள் குறித்து உலக வங்கியின் பிரதிநிதிக்கு விளக்கினார். இலங்கையில் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் வினைத்திறன் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயலூக்கமான நடவடிக்கைகளையூம் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கினார். அத்துடன்இ ஆணைக்குழு எதிர்கொள்ளும் முன்னேற்றத்தைத் தடுக்கும் செயல்பாட்டுக் குறைபாடுகள் தொடர்பாகவூம். குறிப்பாக முக்கியமான சவால்கள் மற்றும் தடைகள்இ பற்றி கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கங்கா ஹெய்யன்துடுவ மற்றும் உதவிப் பணிப்பாளர் நாயகம் டிஸ்னா குருசிங்க ஆகியோரும் கலந்துகொண்டு தமது பங்களிப்பினை வழங்கினர்.

திருமதி பாப்இ ஊஐயூடீழுஊ இன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தனது நேர்கணிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியதுடன்இ இலங்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மைத்திறனை நிலைநிறுத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு உலக வங்கியின் தொடர்ச்சியான ஆதரவையூம் ஒத்துழைப்பையூம் வழங்குவதாக உறுதியளித்தார்.

நல்லாட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காகவூம்இ ஆணைக்குழுவின் செயல்திறனை அதிகரிக்கவூம்இ சர்வதேச தரப்பினருடனான உறவூகளை வலுப்படுத்தவூம் ஆணைக்குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த சந்திப்பு ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

WhatsApp Image 2024 09 10 at 16.13.24

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search