சட்ட விரோத மணல் அகழ்வூ தொடர்பாக பெதிகம தெற்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் வழக்குப் பொருட்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக பன்னிபிடிய ருக்மலை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் 25000.00 ரூபாயை இலஞ்சமாக கொடுக்க முற்பட்டுள்ளார்.
இவ்வழக்கானது 2024.09.11 அன்று 4ஆம் இலக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதி மகே~; வீரமன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் குற்றத்தை ஒப்பக் கொண்டதன் அடிப்படையில் 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன்இ 01 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கறித்த 25000.00 ரூபாயை அரசுடைமையாக்கவூம் உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழு சார்பாக உதவிப்பணிப்பாளர் (சட்டம்) துசிதா ஜயநெத்தி அவர்களால் கையாளப்பட்டது.