முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதுல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு கிடைத்த சொத்துக்கள் தொடர்பான முறைப்பாடொன்றை விசாரணை செய்யும் போது அவ்விசாரணைக்கு எதிராக குறித்த சந்தேக நபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் 2024.08.29 அன்று கௌரவ நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சுஜீவ சேனசிங்க, தனது வருமானம், செலவுகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் எழுத்துமூலமான சத்தியப்பிரமாண அறிக்கையை வழங்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதிவாதிகள் முறையான அதிகாரப் பிரதிநிதித்துவம் இன்றி அறிவித்தல் விடுத்துள்ளமையினால், ஆணைக்குழுவின் தீர்மானத்தை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது> எதிர்மனுதாரர்கள் சார்பில் எழுப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதுல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் அயேசா ஜினசேன> பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா மற்றும் கயான் மாதுவகே (உதவிப் பணிப்பாளர் சட்டம்;) ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.