இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றிற்கு அமைய சுகாதார அமைச்சில் அறுவை சிகிச்சை விளக்குகள் 35 இனை கொள்வனவு செய்வதற்கான டென்டர் நடைமுறையில் இடம் பெற்ற ஊழல் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது.
குறித்த விசாரணைகளின் போது, தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராகவிருந்த சுகாதார அமைச்சின் உயிர்மருத்துவப் பொறியியல் பிரிவின் பொறியியலாளரான சுபசிங்க ஆரச்சிகே ஜனப்பிரிய கருனாதிலக எனும் சந்தேக நபருக்கு எதிராக 1954 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் விடயங்கள் தெளிவாகின. அதனடிப்படையில், 2024.10.01 அன்று குறித்த சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.