இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இலங்கை சுங்கத்தின் அனுமதி பெறப்படாத வாகனங்கள் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் பொறுப்பில் எடுக்கப்பட்ட மிட்சுபிசி ஜீப் வாகனமொன்று நீதிமன்ற உத்தரவின் பெயரில் 11.10.2024 அன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் மேலதிக சுங்க விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத்திடம் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே அவர்களால் ஆணையிடப்பட்டது.
இவ்வாகனத்தை சட்ட விரோதமாக பதிவு செய்ததன் ஊடாக அரசிற்கு அண்ணளவாக 5 மில்லியனிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளது. குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு உதவி செய்த சுங்க அதிகாரிகள் மற்றும் குறித்த வாகனங்களை பதிவு செய்வதற்கு உதவிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் தொடர்பாக விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்து நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்துமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிடப் பட்டுள்ளதுடன் இவ்வழக்கினை மீண்டும் 17.01.2025 அன்று விசாரிப்பதற்கு ஆணையிடப்பட்டது.