தங்கல்ல மதுவரி அலுவலகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் இலஞ்ச வழக்கொன்று தொடுக்கப்பட்டிருந்ததுடன், குறித்த வழக்கானது முறைப்பாட்டாளரினால் தன் கணவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்காதிருப்பற்காக குறித்த மதுவரி உத்தியோகத்தர் 5000.00 ரூபாய் இலஞ்சம் பெற்றமை தொடர்பிலாகும். இது 2024.10.23 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த மதுவரி உத்தியோகத்தர் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கெடமான, எல்தெனிய பிரதேசத்தில் வெள்ளை பீடி கையிருப்பில் வைத்திருந்தமை தொடர்பில் வழக்குத் தொடராமல் இருப்பதற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து 5000.00 ரூபாய் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் ஆணைக்குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு எதிராக 12 குற்றங்களின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், நீண்ட கால விசாரணைக்குப்பின் 2019.01.22 அன்று மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி அவர்கள் பிரதிவாதியை 01 முதல 07 வரை மற்றும் 9ஆவது குற்றச்சாட்டுக்களுக்கு குற்றவாளியாக்கியதுடன், 8,10-12 குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை அளித்தும் தீர்ப்ப வழங்கியிருந்தார்.
இரண்டு தரப்பு வாத பிரதிவாதங்களை கருத்திற்கொண்டு பிரதிவாதி மேல் நீதிமன்ற தீர்ப்பக்கெதிராக மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த மேன்முறையீடு தொடர்பில் குற்றப்பத்திரத்தில் உள்ள 1-6 வரையான குற்றச்சாட்டுக்களில் பிரதி வாதி குற்றமானவர் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வழக்கில் பிரதிவாதியை பிரதிநிதித்துவப்படுத்தி சனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன மற்றும் ஆணைக்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிப்பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க ஆகியோர் தோற்றினர்.