கொழும்பு, இலங்கை - மார்ச் 4, 2025
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கௌரவ அகியோ இசோமாடா அவர்கள் தனது குழுவினருடன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவெல சந்திப்பு கடந்த 04.03.2025 மற்றும் ஆணைக்குழுவின் அலுவலர்களுடனான சந்திப்பு மார்ச் 4, 2025, கொழும்பில் உள்ள ஊஐயுடீழுஊ அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கும் இடையிலான தற்போதைய மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆணையாளர்களில் ஒருவரான திரு. கே.பி. ராஜபக்ஷ, ஊழலுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதலீட்டாளர்களின் பங்கு குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பின் போது, தூதுவர் இசமாட்டா இலங்கையின் ஆளுகை மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு குறிப்பாக சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதில் ஜப்பானின் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்தினார். நாட்டின் அபிவிருத்திக்கு இன்றியமையாத வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதற்காக வெளிப்படையான மற்றும் ஊழலற்ற சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை தூதுவர் இசமாட்டா வலியுறுத்தினார்.
CIABOC இன் தலைவரான நீதியரசர் இத்தவெல அவர்கள், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, குறிப்பாக முதலீட்டுத் திட்டங்களில் ஊழல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அனுதாபம் தெரிவித்தார். முதலீட்டுத் திட்டங்களில் ஊழல் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், CIABOC ஆல் முழுமையாக விசாரித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தூதுவர் இசமாட்டாவிடக் உறுதியளித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பையும், குறிப்பாக நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஏற்படுத்துதல், ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல் போன்றவற்றையும் இந்த கலந்துரையாடல் உள்ளீர்த்திருந்தது. இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட ஒரு பரீட்சார்த்த முயற்சியான 2025-2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டத்தை தயாரித்து அமுல்படுத்துவது முக்கியமான பணியிலக்காகும்.
நேர்மைத்திறன் மற்றும் ஊழல்-எதிர்ப்பு நடவடிக்கைகளின் உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தி, முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக இலங்கை இருப்பதை உறுதிசெய்வதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு பிரதிபலித்தது. இலங்கையில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான சூழலை வளர்ப்பதற்கு தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்ற இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான முன்முயற்சிகளில் பரஸ்பர நலன்களை முன்னெடுப்பதற்கு ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்து வரும் இராஜதந்திர மற்றும்
ஒத்துழைப்பு முயற்சிகளை இந்த நல்லெண்ண சந்திப்பு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான சூழலை உருவாக்குவதற்கு தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும்.