1994 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சார்த்துதல்களைப் புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் முகமாக சிவில் விசாரணை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு 2018.10.27 ஆம் திகதி திறந்த போட்டிப் பரீட்சையொன்றும் 2019.07.04 ஆம் திகதி கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீ;ட்சையொன்றும் இடம்பெற்றது. அப்போது நாட்டில் பரவியிருந்த கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாகவூம்இ 200 சிவில் விசாரணை உத்தியோகத்தர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதை இடைநிறுத்த அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்; அடிப்படையிலும்இ அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யூம் செயன்முறையை மீளாய்வூ செய்வதற்கான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் அந்த ஆட்சேர்ப்பு இரத்துச் செய்யப்பட வேண்டியிருந்தது.
2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டம் 2023 செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தமையால்இ அந்த சட்டத்தின் 26 ஆம் பிரிவூக்கு அமையவே புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டியூள்ளது. ஆகையால் 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சார்த்துதல்களைப் புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட சிவில் விசாரணை உத்தியோத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பை மேற்கொள்வதற்கு தற்போது வரை சட்ட ரீதியாக தடையொன்று காணப்படுவதால்இ அந்து ஆட்சேர்ப்பை மேற்கொள்ள முடியாது என இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சார்த்துதல்களைப் புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையின் பிரகாரம் இத்தால் அறியத் தருகிறேன்.