ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) ஜனாதிபதியின் செயலகத்துடன் இணைந்து, தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மைத்திறன் மதிப்பீட்டு கட்டமைப்பின் இறுதி வரைவை அறிமுகப்படுத்தவும், அனைத்து அரசு நிறுவனங்களிலும் உள் விவகார அலகுகளை (IAU) நிறுவவும் அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் அமர்வை நடாத்தியது. இந்த அமர்வு அரச அதிகாரிகளை உணர்வு பூர்வமாக திறம்பட செயல்படுத்துவதற்கான கட்டமைப்பைச் செம்மைப்படுத்த அவர்களின் கருத்துக்களைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
முன்மொழியப்பட்ட தேசிய நேர்மைத்திறன் மதிப்பீட்டு கட்டமைப்பு, ஜனாதிபதியின் . PS/SP/சுற்றுநிருபம்/02/2025. சுற்றுநிருபம் மூலம் நிறுவப்பட்ட உள்ளக அலகுகளின் (ஐயுருள) கீழ் செயல்படுத்தப்படும். இந்த முயற்சியானது ஊழலைக் கட்டுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் அரச துறையில் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மைத்திறன் மதிப்பீட்டு கட்டமைப்பின்; முக்கிய அம்சங்கள்:
- நிறுவன ரீதியான ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தினை விருத்தி செய்தல்
- அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஊழல் அபாய மதிப்பீடுகளை (CRA) மேற்கொண்டு அபாய நேர்வுகளை குறைத்தல்.
- நேர்மை, விழுமியம் பேண் நிர்வாகம் மற்றும் தகவல் பகிர்வை ஊக்குவித்தல்.
- CIABOC இல் அவ்வப்போது மீள் ஆய்வுக் கூட்டங்களை நடத்துதல்.
- உள் விவகார அலகுகளின் (IAU) முன்னேற்றத்தைக் கண்காணிக்க டிஜிட்டல் அறிக்கையிடல் தளத்தை செயல்படுத்துதல்.
- சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகை மற்றும் முரண்பாட்டு ஆர்வ முகாமைக்கு இணங்குவதை உறுதி செய்தல்.
- நெறிமுறை நிர்வாகம் மற்றும் நடத்தை விதிகளைப் பின்பற்றுவதற்கான கொள்கைகளை நிறுவுதல்.
கலந்துரையாடல் அமர்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா சனத் குமாநாயக்க ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. ரங்கா ஸ்ரீநாத் திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த திருமதி சந்திமா விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதான அதிகாரிகள் உரை நிகழ்த்தினர்.
2025 பெப்ரவரி 27 ஆம் திகதி கொழும்பு மண்டரினா ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சரவை அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலகங்களை பிரதிநிதித்தும் வகையில் 107 அரச அலுவலரகள் மேற்படி கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மைத்திறன் மதிப்பீட்டு கட்டமைப்பு, கொரியாவின் புகழ்பெற்ற ஊழல் எதிர்ப்பு முயற்சி மதிப்பீட்டால் (AIA) ஈர்க்கப்பட்டு, கொரிய அரசாங்கத்தின் தொழில்நுட்ப உதவியுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) மூலம் உருவாக்கப்பட்டது.
பொதுத்துறையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது. பங்குதாரர்களின் கருத்துக்களை இணைப்பதன் மூலம், கட்டமைப்பு விரிவானதாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், நாட்டின் நிர்வாக நோக்கங்களுடன் ஒத்துப்போகும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டமைப்பை இறுதி செய்து செயல்படுத்துவது, ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், பொது நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் நேர்மைதிறன் மிகு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லில் கால்பதிக்கின்றது.