2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 80 ஆனது பல பிரிவுகளினுள்ளடங்கும் அலுவலர்கள் மற்றும்; நபர்களால் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்துதல் வேண்டும் என்று தேவைப்படுத்துவதுடன் அது தொடர்பான புதிய மாற்றங்கள் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்தும் படிவம் குறித்த விழிப்பூட்டல் நிகழ்வு அண்மையில் 2025 மார்ச் மாதம் 20 ஆம் திகதி மு.ப 09:00 – 11.00 மணிவரைக்கும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம், அமைச்சுக்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் மாகாண ஆளுநர் அலுவலகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத் தலைவர்கள் உட்பட சுமார் 125 அலுவலர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர். இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் தலைவர் கௌரவ டபிள்யூ.எம்.என்.பி. இத்தவெல, ஆணையாளர் திரு கே.பி. ராஜபக்ஷ மற்றும் பணிப்பாளர் நாயகம் திரு. ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க ஆகியோரின தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2025ஆம் ஆண்டில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் வெளிப்படுத்தல் தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்கு விதிகள் மற்றும் அவை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது பற்றிய தகவல்களையும், 2026 ஆம் ஆண்டு முதல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை நிகழ்நிலை மூலமாக வெளிப்படுத்தும் செயல்முறை தொடர்பான திட்டங்கள் தொடர்பிலும் கருத்துரைகளையும், தெளிவுபடுத்தல்களையும் ஆணைக்குழுவின் அலுவலர்கள் வழங்கினர்.