இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனங்களைப் பதிவு செய்வதன் மூலம் செய்யப்பட்ட ஊழல் முறைகேடுகள் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணையின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேலும் 12 வாகனங்கள் (கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில்) ஏப்ரல் 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டன. அவை பின்வருமாறு.
01. மிட்சுபிஷி ஜீப் - 01
02. மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப் - 06
03. டொயோட்டா ஜீப் - 03
04. லேண்ட் க்ரஷர் ப்ராடோ ஜீப் - 01
05. நிசான் டபள் கெப் - 01
இந்த ஊழல் முறைகேடுகள் எவ்வாறு நிகழ்ந்தன, அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆணைக்குழு தற்போது தடயவியல் மற்றும் சட்ட தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி விசாரணைகளை நடத்தி வருகிறது.
முன்னதாக, மேற்கண்ட முறையில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட 15 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் அதன் மூலம் அரசுக்கு ரூபா 597,189,323/= நட்டத்தினை ஏற்படுத்தியமை தொடர்பிலான மேலதிக விசாரணைக்காக அவ்வாகனங்கள் ஆணைக்குழுவினால் இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.