முன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL (2)

விசேட மேல் நீதிமன்றத்தின் விசாரணையில் முன்னாள் ஜனாதிபதியின் தலைமைப்பணியாளர் ஐ. எச். கே. மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் பீ. திசாநாயக்க ஆகிய இருவர்மீதும் முறையே 20 வருடம் மற்றும் 12 வருட கடூளிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) வரவேற்கிறது. மேற்குறித்த இருவரும் இந்திய வர்த்தகரிடமிருந்து 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை இலஞ்சமாகப் பெறுவதற்கு இணங்கி அதில் 20 மில்லியன் பணத்தை முற்பணமாகப் பெற்றுக் கொண்டமைக்காக குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் ஊழல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) மேற்கொள்ளப்பட்ட முன்னோடியான அதிரடி நடவடிக்கை மற்றும் பூரண விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றின் முன் வழக்குத் தொடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பவற்றை TISL பாராட்ட விரும்புகிறது.

TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேயசேகர தெரிவிக்கும் போது “வெற்றிகரமான நீதிவிசாரணையின் முக்கிய பாகமாக இருப்பது புலனாய்வுத்துறையினரின் விசாரணையாகும் அவர்கள் அரசியல் தலையீடுகள் இன்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். குற்றவாளிகளது தராதரத்தைக் கருத்தில் கொள்ளாது CIABOC அதிரடி நடிவடிக்கைகளை மேற்கொணடிருப்பது எமக்கு நம்பிக்கையைத்தரும் அதேவேளை எதிர்காலத்திலும் இவ்வாறாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான முன்னுதாரணமாக இதனைக் கொள்ளவேண்டும்;” எனக்கூறினார்.

அசோக்க ஒபேயசேகர மேலும் தெரிவிக்கையில் “ஏனைய வழக்குகள் சாதாரண குற்றிவியல் நடபடிமுறைகளுடாக 10 வருடங்கள் வரை இழுத்தடிக்கப்படும் அதே நேரம் குறிப்பிட்ட சில வழக்குகள் விசேட நீதிமன்றினூடாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றிய தெளிவை பொதுமக்களுக்கு வழங்கியிருருப்பதுடன்; குறித்த நடவடிக்கைகள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.” எனக்கூறினார்.

அரச மரக்கூட்டுத்தாபனத்தினது தவிசாளர் மீது விதிக்கப்பட்டுள்ள குற்றத்தீர்ப்பானது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOEs) மீதுள்ள ஊழல் அபாயங்களை சுட்டக்காட்டுவதுடன்; அந்நிறுவனங்கள் தொழில் தர்மத்தைப்பேண வேண்டியதன் அவசியத்தையும் கோடிட்டுக்காட்டுகிறது. அத்துடன் அரசுக் சொந்தான தொழில் நிறுவனங்களினது நியமனங்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள அதேவேளை ளுழுநு நிர்வாக சபை பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்க செய்வதுடன் அவர்களுக்குள்ள அரசியல் தொடர்புகளை வெளிப்படுத்துவது முக்கிய அம்சமாகும். இதனை முடிவுறுத்தும் வகையில்இ இந்த வருட தொடக்கத்தில் நாட்டின் முதலாதாக பொதுவெளியில் அரசியல் ரீதியாக தொடர்புபட்டுள்ள நபர்கள் பற்றிய www.peps.lk எனும் இணையத்தளத்தினை TISL வெளியிட்டுள்ளதுடன் அது தொடர்பான பின்னூட்டங்களையும் மேற்கொள்ளவுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search