செவனகல பொலிஸ் நிலையத்தின் 10 வது மைல் பொலிஸ் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் கொடித்துவக்கு கங்கானம்லாகே புத்ததாஸ என்பவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் பிரகாரம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ. கே. எம். பட்டபந்திகே அவர்கள்> நான்கு குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றவாளியாக்கி இன்றைய தினம் (12/12/2019) 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
செவனகல பொலிஸ் நிலையத்தின் 10 வது மைல் பொலிஸ் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் கொடித்துவக்கு கங்கானம்லாகே புத்ததாஸ என்பவர் 2011 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி அல்லது அண்மித்த திகதி ஒன்றில் கமஆச்சிகே ஹேமபால என்பவரை சட்ட விரோத கஞ்சா நாற்றுக்களுடன் கைது செய்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருக்க ஊக்குதல் அல்லது வெகுமதி என்ற முறையில் ரூபா. 12000/= பணத்தினை அவாநிறைவாக முறைப்பாட்டாளரான அவரிடம் பரிந்து கோரியதுடன் அதில் ரூபா.6000.00 பிரிதொரு தினத்தில் பெற்றுக் கொண்டுள்ளார். ஆணைக்குழுவின் திறந்த விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இறுதியில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் இரண்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவருக்கு ஒரு குற்றத்திற்கு 4 வருட வருடங்கள் வீதம் மொத்தம் 8 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் நான்கு கற்றச்சாட்டுக்களுக்கும் ஒன்றுக்கு ரூபா 2500.00 வீதம் ரூபா 10000.00 குற்றப்பணமாகவும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவ 26 இன் அடிப்படையில் ரூபா 6000.00 தண்டம் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறினால; 1 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. மேற்படி பிரதான தண்டனை காலம் ஒரேதடவையில் செல்லும் வகையில் நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன்> குறித்த வழக்கானது ஆணைக்குழுவின் சார்பில் சட்டப்பிரிவின் உதவிப்பணிப்பாளரான சால்தீன் முஹம்மட் சப்ரி அவர்களினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.