கிராமவாசியொருவருக்கு மரக்கட்டைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகளை பெற்றுக் கொடுப்பதற்காக ரூபா 2500.00 வன அலுவலர் கோரியுள்ளார். பின்பு ரூபா 500.00 இனை பெற்றுக் கொண்ட பின்பு அந்நபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
பின்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னிலையில் மேற்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் ரூபா 2000.00 இனைப் பெறும் போது கைது செய்யப்பட்டார்.
அது தொடர்பாக பத்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்ட வழக்கின் நிறைவில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலதுங்க அவர்கள் மேற்படி பிரதிவாதி குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.
ஒரு குற்றத்திற்கு தலா நான்கு வருடங்கள் வீதம் ஆறு குற்றச்சாட்டுகளுக்கு 24 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் நீதிபதி அவர்களால் சிறைத்தண்டனை சலுகை அடிப்படையில் நானகு வருடமாக குறைத்து விதிக்கப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செல்வி பிரியாங்கனி ஜயலத் (உதவிப் பணிப்பாளர் சட்டம்) அவர்களினால் முறைப்பாடு முன்னெடுக்கப்பட்டது.