வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தில் பணிப்பாளர் சபை மற்றும் பணியாளர்கள் சிலரால் ஏற்பட்ட நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் தற்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவருமான அப்துல் ஹமீட் மொஹமட் திலிப் நவாஸ் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசரான பீட்டர் மொஹான் மைத்ரீ பீரிஸ் மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான மஹவிதானலாகே முனிதாஸ சார்லஸ் பெர்டினான்ந்து ஆகியோருக்கு எதிராக இலஞ்ச சட்டத்தின் 70 ஆம் பிரிவிற்கு அமைய கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.