பெரும் புள்ளிகளை கைது செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

சனாதிபதி செயலக தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் பீ. திசாநாயக்க ஆகியோர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிபதி கட்டளைப் பிறப்பித்தார். கலாநிதி குசும்தாச மஹாநாம இதற்கு முன் காணி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்களின் செயலாளராக பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இலஞ்சம் மற்றும்  ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகளினால்  கைதுசெய்யப்பட்ட இருவரையும் நள்ளிரவு 12.00 மணியளவில் பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர்.
இலஞ்சம் மற்றும்  ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டினை இலக்கம் 27/09 ரொஸ்மீட் பிரதேசம் கொழும்பு 07 எனும் முகவரியில் வசிக்கும் எம். ஜீ. சீனி (தனியார்)  நிறுவனத்தின் தலைவர் கே. ஆர். கே டப்பய்யா நடராஸா எனும் இந்திய பிரஜையாவார்.
இலங்கை முதலீட்டு சபையின் ஒரு திட்டமாக> எம். ஜீ. சீனி (தனியார்) நிறுவனத்திற்கு அரசினால் வழங்கப்பட்ட கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்கு சொந்தமான உபகரணங்கள் மற்றும் இடத்திற்கான ஒப்பந்தத்திற்கு அனுமதியை வழங்குவதற்காக இலஞ்;சமாக ரூபா 540 மில்லியனை கோரி அதனை 100 மில்லியன் ரூபா வரைக்கும் குறைத்து அதில் ஆரம்ப தொகையாக 20 மில்லியனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. 
இந்நிலையில் எந்தவொரு தலையீடும் இன்றி சந்தேகத்திற்குரியவர்கள் தொடர்பாக சட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுடன் இக்கைதானது ஊழலற்ற இலங்கையை உருவாக்கும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் செயற்பாடாக உள்ளதுடன்  உயர் பதவிகளில் இருப்போருக்கான சிவப்பு அறிவிப்பாகவும் உள்ளது எனலாம். எனவே நீதி நேர்மையுடன் ஜாக்கிரதையாக செயற்படுங்கள்.
 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search