காலி அனுலாதேவி பெண்கள் கல்லூரியின் அதிபர் தரம் 01 இற்கு மாணவியொருவரை உள்ளீர்ப்பதற்காக நேற்று (13 ஆம் திகதி) ரூபா 100000.00 இலஞ்சமாக கோரி அதனை 2019.02.13 அன்று பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அலுவலர்களினால் கைது செய்யப்பட்டார். குறித்த பாடசாலையில் தரம் 01 இல் மாணவியொருவரை உள்ளீர்க்க அவரின் பெயரை அனுமதிப்பட்டியலில் கடந்த இரண்டு வாரகாலமாக சேர்க்காதிருந்த நிலையில்> பின்பு குறித்த மாணவியினை பெயரை உள்ளீர்ப்பதற்கு மேற்படி இலஞ்ச தொகையை மாணவியின் பெற்றோரிடம் கோரியுள்ளார். இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டினை மேற்கொண்டமையை அடுத்து துரிதமாக செயற்பட்ட ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் நேற்று (13/02/2019) மாலை அதிபரின் அலுவலகத்தில் ரூபா 100000.00 இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் அதிபரை கைது செய்துள்ளனர்.