வேறொருவரின் பெயரைப் பயன்படுத்தி ஒரு வியாபாரி பாடசாலைகளிலிருந்து நீக்ககப்பட்ட பழைய புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் செய்தித்தாள்களை 1 கிலோ கிராமிற்கு ரூபா 47.50 என்ற விகிதத்தில் வாங்க மத்திய மாகாண கல்வி அலுவலகம் வழங்கிய டெண்டரில் இருந்து, மோசடியாக நிறையை குறைத்து உண்மையான இடையை மறைத்து பெற்றப்பட்ட அந்த தொகுதிக்கு அதிபருக்கு இலஞ்சம் வழங்குவதாக கூறி 1 கிலோ கிராமிற்கு ரூபா 20.00 என்ற விகிதத்தில் இலஞ்சமாக வழங்குவதாகவும், நிறுக்கப்பட்ட பொருட்களுக்கான ரசீதுகளை 1 கிலோ கிராமிற்கு ரூபா 47.50 என்ற விகிதத்தில் வழங்கவும் சந்தேக நபர் பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில் 01.01.2020 அன்று, குறித்த வியாபாரி பாடசாலைக்கு வந்து பொருட்களை நிறுத்து உரிய விலையில் 32 கிலோவுக்கு மட்டுமே பணம் செலுத்தியிருந்தார். பின்னர் மோசடியான ஒதுக்கப்பட்ட பொருட்களுக்காக அதிபருக்கு ரூபா 7080ஃஸ்ரீ இனை இலஞ்சமாக கொடுத்த வியாபாரியினை அந்த இடத்திலேயே இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்யதனர்.