இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய ரூ 50,000.00 நிதியை இலஞ்சமாகக் கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும், யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய ஸ்ரீ லங்கா மாவட்ட அமைப்பாளர் மற்றும் சமாதான நீதிவான் (முழு நாட்டிற்கும்) ஆக செயற்படுபவர் 2022.09.06 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை
ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
முறைப்பாட்டாளருக்கு அரசாங்கத்தின் தொழில்வாய்ப்பினை வழங்குவதற்காக சந்தேக நபரான மாவட்ட அமைப்பாளரினால் முதலில் ரூபா 150,000.00 மற்றும் பாலியல் இலஞ்சமாக கோரி, பின்னர் அந்நிதியினை ரூபா 50,000.00 வரை குறைக்கப்பட்டுள்ளதுடன், அந் நிதியில் ரூபா 50,000 பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொள்ளும் போது உரிய சந்தேக நபர் மற்றும் அந்நிதியினை இலஞ்சமாகப் பெற்றுக் கொள்வதற்கு உதவி வழங்கியமையினால் மற்றைய சந்தேக நபர் புறக்கோட்டை தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாள் உள்ள மிதக்கும் வர்த்தக கட்டத்தொகுதியின் தெஸ்டா பேக்ஹவுஸ் உணவகத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.