இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் ரூ. 26,000/- இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கரடியனாறு கால்நடை வைத்தியர் ஒருவரை 22.12.2022 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முறைப்பாட்டாளருக்குச் சொந்தமான 30 பசுமாடுகளை பதிவு செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக கரடியனாறு கால்நடை வைத்தியசாலை யில் வைத்து ரூ. 26,000 இலஞ்சம் பெற்றபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.