இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் 15,000/- ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டநிலையில் இருந்த பீட் (Beat) வன அதிகாரி ஒருவரை 21.12.2022 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் கல்முனை பிரதேசத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர் என தன்னைக் காட்டிக்கொண்டு அனுமதிப் பத்திரமின்றி மரங்களை கொண்டு செல்வது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக 15,000/- ரூபா இலஞ்சம் கோரியதுடன் கல்முனை, 298 ஆம் இலக்க ஜரினா டயர் மார்ட் எனும் நிறுவனத்திற்கு முன்னால் வைத்து இலஞ்சம் பெற்றுக்கொண்டபோது கைது செய்யப்பட்டார்.