இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, பொலன்னறுவை காவல்துறை தலைமையக குற்றப்புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜன்ட் ஒருவரை ரூ 10,000/- இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்2023.02.08 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முறைப்பாட்டாளரின் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் இறைச்சிக் கூடம் மற்றும் மாட்டிறைச்சி வியாபாரம் தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிப்பதற்காக ரூ10,000 இலஞ்சம் பெற்ற போதே கதுருவெல பழைய இலங்கை வங்கிக்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.