இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, ரூ 10,000/- இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் கடமையாற்றும் இரண்டு விசாரணை உத்தியோகத்தர்களை 2023.02.09 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முறைப்பாட்டாளர் கடமையாற்றும் ஜீவக ஹெர்பல் (வரையறுக்கப்பட்ட தனியார்) நிறுவனத்தின் ஊதுபத்தி பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள விலை மாற்றம் தொடர்பில் பொலன்னறுவை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள் அதன்போது, ஜீவக ஹெர்பல் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கும், பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள கடைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதுபத்தி பொருட்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கும், மேற்குறிப்பிட்ட பொருட்களை உற்பத்திப் பொருட்களாக ஏற்றுக்கொள்வதற்கும் ரூ 10,000 இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட போது சந்தேகநபர்கள் பொலன்னறுவை, புதிய நகர் மக்கள் வங்கிக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டனர்.