இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கதிர்காமம் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் தனமல்வில பிராந்திய அலுவலகத்தில் கடமையாற்றும் பீட் வன உத்தியோகத்தர் ஒருவரை 185,000/- ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2023.02.15 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
முறைப்பாட்டாளரின் காணியை அண்மித்த காணி வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும், முறைப்பாட்டாளரை குறித்த காணியில் வசிக்க அனுமதிப்பதற்காகவும் குறித்த சந்தேகநபர் 200,000/- ரூபா இலஞ்சம் கோரியுள்ளதுடன், முதலில் 15,000/- ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் மீதி 185,000 ரூபாவை முறைப்பாட்டாளரின் வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில்(லுனுகம - கதிர்காமம் - ஆதி 100 வீதியில்) வைத்து பெற்றுக் கொண்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். .