இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் கல்முனை பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் நிலைய பொறுப்பதிகாரியை 200/- ரூ இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 08.03.2023 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
கல்முனை தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கும் EP NB-4625 எனும் இலக்கப் பேருந்தின் பயண அட்டவணையைப் சுமூகமாக மேற்கொள்வதற்காக குறித்த சந்தேகநபர் தினமும் 200/- ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுவந்துள்ளார். குறித்த சந்தேகநபர் இன்று 08.03.2023 ஆம் திகதி கல்முனை தனியார் பேருந்து நிலையத்தில் வைத்து 200/ ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.