இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நுவரெலியாவில் வசிக்கும் தரகர் ஒருவரை 5000/-. ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 20.03.2023 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்குத் தேவையான அடமானப் பத்திரத்தையும் மற்றும் உரிமையாளரின் சொத்துக்களை வங்கியில் அடமானம் வைக்கக் கூடிய நுவரெலியா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக சந்தேகநபர் ரூ 10,000 கோரியுள்ளார். இதற்காக முதலில் ரூ 5,000 பெற்றுள்ளார். எஞ்சிய 5,000/- ரூபாவை பெற்றுக்கொண்ட போதே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.